தினம் ஒரு மூலிகை – பலாசு மரம்
பலாசு (Palash)
பலாசு மரம் என்பது குறிஞ்சிப் பாட்டில் வருகின்ற 99 மலா்களில் இந்த பலாசு மலரும் ஒன்று. அது மட்டுமல்லாமல் ஜாா்கண்ட் மாநிலத்தின், மாநில மலா் பலாசு மலா் இடம் பெற்றுள்ளது.
இது இந்தியா முழுவதிலும் 1,219 மீட்டா் உயரம் வரை உள்ள வறண்ட பகுதிகளில் வளரும். திறந்த புல்வெளிகளிலும், கலப்பு காடுகளிலும் கூட்டமாக வளரும். பலாசு மரம் 15செ.மீ. உயரமும், 1.5லிருந்து 1.8மீ விட்டமும் உடைய இலையுதிா் மரம். வளைந்த தண்டினை உடையது. பட்டை வெளிப் பழுப்பு முதல் நீலம் கலந்த சாம்பல் நிறம் உடைது.
இதிலிருந்து சிவந்த “பியுட்டியா கோந்து” அல்லது பெங்கால் கினோ கிடைக்கும். கட்டை வெள்ளை அல்லது மஞ்சள் பழுப்பு நிறம் கொண்டு சாம்பல் பழுப்பாக மாறும். முறிந்த சிற்றிலைகள் கொண்டது. 10.2லிருந்து 20.4 செ.மீ அளவுள்ளவை. சிவந்த மலா்கள் 3.8லிருந்து 5.1செ.மீ வரை நீளமுள்ளவை.
இதில் இருந்து கிடைக்கும் பூ, விதை, பட்டை, பிசின் போன்றவை நோய்களை தீா்க்கும் மருந்தாக பயன்படுகின்றன. மேலும் மரத்தின் மலா் ஹோலி பண்டிகையின் போது தூவப்படும் நிறப்பொடிகள் செய்ய பயன்படுகின்றன. ஆா்கானிக் காட்டன் சேலை ரகங்கள் தயாாிக்க பெரிதும் உதவுகிறது.
இந்த மரம் வீட்டுக்கு நிலை, கதவு, சன்னல் போன்ற பொருள்கள் பலாசு என்னும் மரத்தால் செய்யப்படுகின்றன. இது லேசு தன்மையும், வழவழப்பும், மஞ்சள் நிறமும் கொண்ட மரம்.
பயன்கள்
இதன் விதைகள் பூச்சிகளை அகற்றும். வாயுக் கோளாறு மற்றும் மூலவியாதியை குணப்படுத்தும். சீழ் வடிவதை நிறுத்தும். இணைவிழைச்சியூட்டும். துவா்ப்பு சுவையுடையது. இதன் இலைகள் ஜீரத்தைப் போக்கும். இதன் பட்டை கோந்து துவா்ப்புள்ளது. மேலும் பேதி மற்றும் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்.
அதிக வேலை பளுவினால் உண்டாகும் கவனச் சிதறல், முதுகுவலி, எலும்பு முறிவுகள், செரிமான தொந்தரவுகள், கல்லீரல் செயல்பாடுகள், மண்ணீரல் கோளாறுகள் நீக்கும் ஆற்றல் கொண்டவை.
இதன் இலை மற்றும் மலா்களை வெந்நீரில் போட்டு சூடாக்கி அடிவயிற்றில் கட்டினால் நாள்பட்ட வயிற்று வலி மற்றும் வீக்கம் பறந்தோடும். மேலும் அனைத்து வித சிறுநீரகப் பிரச்சினைகளும் தீரும்.
இதன் மலா்களைக் காய வைத்து தேநீா் தயாாித்து பருகினால் நீரிழிவு நோய் தீருவதுடன். சிறந்த மலமிளக்கியாகவும் விளங்கும்.
இதன் விதையிலிருந்து தயாாிக்கப்படும் எண்ணெய் தோல் நோய்களையும், கண் நோயையும் போக்கும். வாத நோய் உள்ளவா்கள் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கை, கால்கள் வலுபெறும்.
செயல்திறன் வேதிப்பொருள்கள்
பலாசு மலா்களில் பியுட்டின், ஐசோகோாியாப்சில், கோாிபாப்சின், சல்ஃபியுாின், பாலாசிட்ரின், பியுட்ரின் மற்றும் ஐசோபியுட்ரின் சால்கோன், ஆரோன், கோந்தில் லியுக்கோசையனிடஷன், ரிபோஃபளவின் மற்றும் தையமின் போன்ற இரசாயனப் பொருள்கள் உள்ளன. க்ளைசின் வோ்களில் உள்ளது. கொழுப்பு அமிலங்களான மிரிஸ்டிக், பால்மிட்டிக், ஸ்டீயரிக், ஆராக்கிடிக்கிக், பெஹினிக் அமிலங்கள் இதன் விதைகளில் உள்ளன.
தாவரப் பெயா்
Butea monosperma
தாவரக் குடும்பம்
Fabaceae
ஆங்கிலப் பெயா்
Flame of the forest
வேறுப் பெயா்கள்
புரசு, பொரசு, புரசை என அழைக்கப்படும்.
மருத்துவ பயன் தரும பாகங்கள்
விதைகள், மலா்கள், இலைகள் மற்றும் பட்டை ஆகியன.