தினம் ஒரு மூலிகை – ஓமம்
ஓமம் (Ajwain)
ஓமம் மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். ஓமம் விதைகள் மருத்துவத்திலும், உணவிலும் பயன்படுகிறது. சீதளத்தால் ஏற்படும் ஜுரம், சளி, இருமல், வயிறு சம்மந்தமான நோய்கள், குடல் இரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள் போன்றவற்றை ஓமம் சரி செய்யும் என சித்த மருத்துவ நூல்களில் குறிபிடப்பட்டுள்ளது.
ஓமம் செடி வளரியல்பு
இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். ஓமம் செடி ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கிறது. இதன் இலைகள் சிறகு போன்ற பிளவுபட்ட நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீளமாக வளர்ந்திருக்கும். இதன் காய்கள் மிகுந்த வாசமுள்ளவை. முற்றிப் பழமாகிய பின் உலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுகிறது.
ஓமத்தை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது. ஓமத்தில் ‘தைமோல்’ என்னும் வேதிபொருள் உள்ளது. இது தான் ஓமத்திற்கு தனித்துவமான சுவை மற்றும் மணத்தைக் கொடுக்கிறது. இந்த வேதிப்பொருள் தைம் என்னும் மூலிகையிலும் உள்ளது. எனவே தான் தைம் மற்றும் ஓமம் இரண்டும் ஒரே மாதிரியான மணத்தைக் கொண்டுள்ளது.
ஓமம் பயன்பாடு
ஓமம் கறிவகைகள், ஊறுகாய், பிஸ்கட்டுகள், பானங்கள், மிட்டாய்கள் போன்றவற்றில் அதன் தனித்தன்மையை வெளிப்படுத்தவும், வாசனைக்காகவும், காரச் சுவைக்காகவும் பயன்படுகிறது. வலியை அகற்றும் மருந்தாகவும், பசியை ஊக்குவிப்பானாகவும், ஜீரணக் கோளாறுகளை சரிசெய்யும் தூண்டுகோலாகவும் பயன்படுகிறது.
ஓமம் வகைகள்
ஓமத்தில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன. சாதாரண ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும். ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது.
உணவில் நறுமணத்திற்காகச் சேர்க்கப்படும் ஓமமானது அதிக உடல் ஆரோக்கிய பலன்களை கொண்டது, குறிப்பாக, இது உடலின் செரிமானத்திற்கும் பொதுவான வியாதிகளான சளி, இருமல் பல் வலி, காது வலி போன்றவற்றிற்கு மருத்துவ தீர்வு தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமுடி பராமரிப்பு மற்றும் ஆர்த்ரிட்டீஸ் நோயின் பொழுது ஏற்படும் வலியினை கட்டுப்படுத்துவதற்கும் ஆஸ்துமா, சிறுநீரக செயலிழப்பு, உடல் எடை குறைதல், வரைமுறையற்ற மாதவிடாய் சுழற்சி பிரச்சனைகள் ஆகியவற்றிற்கும் தீர்வாக இந்த ஓமம் பயன்படுகிறது.
சளி, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஓமத்தின் நீரை பயன்படுத்தலாம். காற்றின் மாசுவினால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு, ஓமம் ஒரு சிறந்த மருந்தாகும்.
ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்தால், மூக்கில் நீர் ஒழுகுதல், சளி, மூக்கடைப்பு ஆகியவை குணமடையும்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சரி செய்யவும் இதை தாராளமாக பயன்படுத்தலாம். வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்து.
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஓமத் திரவம் நல்ல ஜீரண சக்தியை தரும். ஜீரணத்திற்கு மட்டுமின்றி சளி, இருமல் போன்ற தொந்தரவிற்கும் ஓமத் திரவம் அருமருந்து.
மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கவும், சிறுநீர் கழிக்கும் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இது மிக உதவியாக இருக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கும் இந்த ஓமத் திரவத்தை அருந்தினால் வலியில் இருந்து விடுபடலாம். வயிற்றில் இருக்கும் புண் ஆறுவதற்கும் ஓமம் மிகவும் உதவியாக இருக்கும்.
வெறும் கடாயில் கால் தேக்கரண்டி ஓமம் சேர்த்து வறுக்கவும். நன்கு பொரியும் வரை வறுக்கவும். மிதமான சூட்டில் வைத்து வறுக்கவும். பின்பு அதோடு அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அரை கப் தண்ணீர் கால் கப் தண்ணீர் ஆகும் வரை கொதிக்க விடுங்கள்.
பெரியவர்கள் ஓமத் திரவத்தை அப்படியே அருந்தலாம், சின்ன குழந்தைகளுக்கு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து அருந்த வைக்கலாம்.
ஓமத்தில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள்
ஹெர்பல் பொருட்களில் ஒன்றான ஓமம் தனக்குள்ளே அதிக ஊட்டச்சத்துகளை வைத்துள்ளது. குறிப்பாக, புரோட்டீன், கொழுப்பு, மினரல், ஃபைபர், கார்போஹைட்ரேட், கால்சியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இதில் இடம்பெற்றுள்ளன
செரிமான அமைப்பினை பாதுகாக்கும்
உடலின் செரிமான பிரச்சனை காரணமாக ஏற்படும் அசிடிட்டி மற்றும் செரிமான கோளாறுகளை தடுப்பதற்கு இவற்றில் பலன் உள்ளது. இவற்றினை உப்பு சேர்த்த சுடுதண்ணீரில் கொஞ்சமாக ஓமத்தை சேர்த்து குடித்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் .
சளி மற்றும் பல் வலி
உடலின் பொதுவான பிரச்சனைகளான சளி மற்றும் பல் வலியைப் போக்குவதற்கு இவற்றில் ஊட்டச்சத்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை வாயில் கொஞ்சமாக சேர்த்து நன்றாக மென்று மிதமான சுடு தண்ணீரில் சேர்த்து குடித்தால் இந்த பிரச்சினை தீர்வு கிடைக்கும்.
முடி பிரச்சினை மற்றும் ஆர்த்ரிடிஸ் வலியிலிருந்து நிவாரணி
முடி வெள்ளையாகும் பிரச்சனைக்கு முடிவு கட்ட ஓமம் பயன்படுகிறது. கருவேப்பிலை உடன் வெளிர் திராட்சை மற்றும் ஓமம் சேர்த்து ஒரு கப் தண்ணீரில் மிக்ஸ் செய்து பின் தினமும் குடித்து வந்தால் இந்த தலை முடி பிரச்சனைகள் நீங்கும் மற்றும் ஆர்த்ரிடிஸ் நோயினால் ஏற்படும் வலியினை குறைப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன
எடை குறைய
உடல் எடையை குறைப்பதற்கு இவை அதிகம் பயன்படுகின்றன மற்றும் தேன் மற்றும் வினிகருடன் ஓமத்தினை கலந்து 10 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கிட்னியில் இருக்கக்கூடிய கற்கள் கரைந்து போக வாய்ப்பு அதிகம். எனவே, அசைவ உணவில் இந்திய சமையல் அறையில் ஓமத்திற்கு மிக முக்கியமான பங்கு உண்டு. குறிப்பாக, சிக்கன் மற்றும் மீன் போன்ற மாமிச உணவு தயாரிப்பதில் ஓமம் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் ஹெர்பல் டீ பிஸ்கட் ஜூஸ் ஆகியவற்றை தயாரிப்பதிலும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஓமத்தில் அதிகம் பயன்படுத்துவதால் சில பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உங்களுடைய மருத்துவர் கலந்தாலோசித்த பிறகே நீங்கள் இதனை பயன்படுத்த வேண்டும்.
தாவரப் பெயா்
Trachyspermum ammi
தாவரக் குடும்பம்
Apiaceae