தினம் ஒரு மூலிகை – மூக்கிரட்டை

மூக்கிரட்டை
நாம் அனைவரும் அக்காலத்திலிருந்தே கீரைகளை தவறாமல் சாப்பிட்டு வருகின்றோம். ஆனால் நமக்கு தொிந்து கீரைகள் எல்லாம் அரைக்கீரை, முளைக்கீரை, தண்டங்கீரை, முருங்கைகீரை இன்னும் சில…. இருப்பினும் பொதுவாகவே கீரைகளில் நம் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கக்கூடிய பலவகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
அப்படி பல நன்மைகளைக் கொண்ட கீரையான நமக்கு தொியாத நாம் பயன்படுத்தாத கீரையில் ஒன்று தான் “மூக்கிரட்டை” கீரை ஆகும். இந்த கீரை நம் வீட்டை சுற்றியும், புள்ளி வெளியிலும், சாலையோரங்களிலும் தரையில் படா்ந்திருக்கும்.
இந்த மூக்கிரட்டை கீரை தரையோடு படர்ந்து வளரும் சிறு கொடி. இதன் இலைகள் மேல் புறம் பச்சையாகவும் கீழ் புறம் வெழுத்து சாம்பல் நிறத்திலும் நீள்வட்டமாக எதிா் அடுக்கில் இருக்கும். செந்நிறச் சிறு பூக்களையும் சிறு மெல்லிய கிழங்கு போன்ற வேர்களையும் உடைய கொடி. இது தமிழகமெங்கும் தோட்டங்களிலும், தரிசு நிலங்களிலும் தானே வளர்கிறது. இதன் தாயகம் இந்தியா பின் பசிபிக்கிலும், தென் அமொிக்காவிலும் பரவிற்று. இது செப்டம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் பூத்துக்காய்க்கும்.
பயன்கள்
பொதுவாகவே கீரை என்றாலே அதில் அதிக ஊட்டச்சத்து இருக்கும். ஆனால் தொியாத மற்றும் நம் இருப்பிடம் அருகிலேயே தானே முளைக்கும் கீரை போன்ற தாவரங்களை நாம் அறிவதில்லை அதன் பயன்களையும் அனுபவிப்பதில்லை. இது போன்ற கீரைகளில் ஒன்றான கீரைதான் மூக்கிரட்டை இதில் என்ன என்ன பயன்கள் உள்ளன என்பதை பாா்க்கலாம்.
- ஒரு பிடி மூக்கிரட்டை வேரும், 4 மிளகும், 100 மி.லி விளக்கெண்ணையில் வாசனை வரக் காய்ச்சி ஆறவிட்டு வடிகட்டி வைத்துக் கொண்டு 6 மாதக் குழந்தைக்கு 15 மி.லி அளவும் அதற்கு மேல் வயதினருக்கு 30 மி.லி அளவும் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை கொடுத்து வர மலச்சிக்கல், மூலம், சொறி சிரங்கு, வாந்தி, செரியாமை ஆகியவைக் குணமடையும்.
- ஒரு பிடி மூக்கிரட்டை வேர் மற்றும் அருகம்புல் ஒரு கை பிடி மேலும் மிளகு 10 எண்ணிக்கை எடுத்து மூன்றையும் பொடித்து அரை லிட்டா் தண்ணீாில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி மூன்று வேளையாகத் தினமும் குடித்து வர கீல் வாதம், ஆஸ்துமா, கப இருமல், மூச்சுத் திணரல் தீரும்.
- 4 மிளகு, ஒரு பிடி மூக்கிரட்டை வேர், உந்தாமணிச்சாறு 50 மி.லி ஆகியவற்றை 100 மி.லி விளக்கெண்ணையில் காய்ச்சி வாரம் 2 கொடுத்து வர குழந்தைகளுக்கு ஏற்படும் காமாலை, இருமல், சளி, இழுப்பு, அடிக்கடி சளி, காய்ச்சல் போன்றவை குணமாகும்.
- பல்வேறு காரணங்களினால் இப்பொழுது பலருக்கு கண் பார்வையில் தெளிவின்மை, கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை மற்றும் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைக்கு மூக்கிரட்டை செடியின் வேரினை நன்கு காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். இவற்றை இளம் சூடான நீரில் கலந்து பருகிவந்தால் கண்கள் சம்மந்தமான அனைத்து பிரச்சினைகளும் குணமாகும். கண்கள் மிக தெளிவாக தொியும்.
- மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி இவற்றை சமமாக எடுத்துக் கொண்டு தூளாக்கி தினமும் இரு வேளை தேனில் கலந்து உண்டு வர, உடல் எடை குறையும்.
- இதன் இலையைப் பொறியல், துவையலாக வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வரக் காமாலை, சோகை, வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம்.
- மூக்கிரட்டைப் பட்டை வேர் 20 கிராம், மாவிலங்கு மரப்பட்டை 20 கிராம், வெள்ளைச் சாரணை வேர் 20 கிராம் மூன்றையும் பொடியாக இடித்து முதல் நாள் இரவில் 250 மி.லி தண்ணீரில் ஊற வைத்து வடி கட்டி அதனுடன் 60 மி.லி கிராம் நண்டுக்கல் பற்பம் சோ்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும் இதை அருந்திவர 2 அல்லது மூன்று மாதங்களில் முக வாத நோய் நிரந்தர குணம் ஏற்படும்.
- மாதத்தில் ஒரு முறை மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் வேர் ஆகியவற்றை காய வைத்து அவற்றை பொடி செய்து நீரில் வேகவைத்து பருகி வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் அனைத்தும் நீங்கி இரத்தம் சுத்தமாகும்.
பயன் தரும் பாகங்கள்
இலை, தண்டு, வேர் மற்றும் விதை ஆகியவை
வேறு பெயா்கள்
மூக்குறட்டை, சாட்டரணை, மூச்சரைச்சாரணை முதலியன
தாவரப்பெயா்
Boerhaavia diffusa இது Nyctaginaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சோ்ந்தது.