Microsoft Teams
Microsoft teams எனும் app Teamwork -காக பணிபுரியும் இடங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் ஒரு இணையதள செயலி. இதை நாம் Mobile, Laptop, Desktop இப்படி அனைத்து Machine மூலமும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பயன்பாடுகள் அதிகமாக உள்ளது. ஒரு கம்பெனியில் முக்கியமான கலந்துரையாடலுக்கு ஒரே நேரத்தில் பலநபர்களுடன் தொடர்பு கொள்ள ஏதுவாக உள்ளது. Microsoft teams –யை https://www.microsoft.com/en-in/microsoft-teams/group-chat-software இந்த website -ல் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதை முதன்முறையாக செயல்படுத்துவதற்கு Username /Password கொண்டு Sign in செய்துக் கொள்ள வேண்டும். இதில் தனிநபருக்கோ அல்லது ஒரே நேரத்தில் அனைவருக்கும் என File -களை அனுப்பிக்கொள்ளலாம்.
Microsoft Teams எனும் இந்த செயலியானது அலுவலக பணிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. இதில் அலுவலகத்தில் மட்டுமல்லாமல் அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களிலும் அலுவலக தகவல்களை பெற இந்த செயலி உதவுகிறது. தற்போதய இயந்திர உலகத்தில் அனைத்தும் இணைய வழியில் மூலமாக தான் தகவல் தொடர்பு என்பது நடைபெற்றுக் கொண்டு உள்ளது. அது போன்ற தகவல் பரிமாணங்களுக்கு இந்த Microsoft Teams எனும் செயலி பயனுள்ளது.
இந்த செயலியில் Activity, Chat, Calls, Video calls, Meeting, Files என நிறைய options உள்ளது. options என்பது நாம் teams மூலம் எந்த வகையான பணியினை செய்ய தொடங்க உள்ளோம் என்பதற்கு நாம் செய்ய வேலைபாடுகள் அதில் நாம் காணலாம். Chating மூலம் முக்கிய தகவல்களையோ, சந்தேகங்களையோ பரிமாறிக் கொள்ளலாம். அதே நேரத்தில் Calls மூலம் பல நபருகளுடன் பேசிக்கொள்ளலாம். மேலும் இதில் Meeting schedule செய்து கொள்ளலாம் மற்றும் அனைவரும் ஒரே நேரத்தில் Meeting -ல் கலந்து கொள்ளலாம். இதில் Files Transfer செய்வது மிகவும் எளிது. ஒரே நேரத்தில் Fils, Photos இப்படி தேவையான தகவல்களை அனுப்பிக் கொள்ளலாம். Teams -ல் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் அல்லது common ஆகவும் எல்லா விதமான Files -களை அனுப்பி வைக்க முடியும். மேலும் Microsoft teams -ல் அனைவருக்கும் அல்லாமல் குறிப்பிட்ட நபருக்கு மட்டும் தனிப்பட்ட Channel ஒன்றை உருவாக்க முடியும். இதன் நோக்கம் குறிப்பிட்ட சில அலுவலக தகவல்களை சிலருக்கு மட்டும் பகிர்வதற்கு பயன்படுத்தபடுவது. இந்த தனிப்பட்ட Channel -ளை உருவாக்குவதற்கு Teams -ல் நுழைந்து More options -ல் சென்று
Add channel கொடுக்க வேண்டும். பிறகு Name and description -யை கொடுக்க வேண்டும் பிறகு select Private – Accessible only to a specific group of people within the team -யை Select செய்ய வேண்டும் பின்பு Select Add -ல் நமக்கு தேவையான நபர்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம். நாம் அனுப்பும் குறிப்பிட்ட தகவல் நாம் Select செய்து நபருகளுக்கு மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.
https://support.microsoft.com/en-us/office/create-a-channel-in-teams-fda0b75e-5b90-4fb8-8857-7e102b014525 – எனும் இணைய முகவரியில் இருந்து Channel Created செய்வது எப்படி என்தை மிகவும் எளிதாக கற்றுக் கொள்ளலாம். இதே போன்று இன்னும் பல Options -கள் இந்த செயலில் உள்ளன.