அது செவ்வாய் கிரகத்தின் வானவில்லா?
நாசாவின் ரோவா் விண்கலத்தின் விடாமுயற்சியால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா விளக்கியது. செவ்வாய் கிரகத்தில் எப்படி ஒரு வானவில் சாத்தியம் என்பதற்கு Reddit and Twitter போன்ற இணையதளம் வாயிலாக பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டது. ஆனால் இந்த விவாதம் செவ்வாய் கிரத்தின் நிலத்தையோ அல்லது அதன் தன்மையை பற்றியோ அல்ல. செவ்வாய் கிரகத்தில் தோன்றிய மஞ்சள் நிற வானவில்லை பற்றியதே. இறுதியில் விவாத முடிவில் செவ்வாய் கிரகத்தின் மஞ்சள் நிற வானவில்லாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் நாசா அது வானவில் இல்லை என்று தெளிவுப்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் வானவில்லிற்கு சாத்தியமில்லை ஏனென்றால் வானவில் என்பது சுற்று நீர் துளிகளால் உருவாககூடிய ஒன்றாகும். செவ்வாய் கிரகத்தில் வானவில் உருவாகும் அளவிற்கு போதுமான நீர் இல்லை. மேலும் புகைப்படம் எடுக்கும் போது கேமரா லெனஸ் விரிவடைவதன் மூலம் இந்த வண்ணம் உருவாகி இருக்க கூடும் என்றும் இது வானவில் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளனா்.
மேலும் ரோவர் விண்கலம் தன் செயல்பாட்டிற்காக முன்னேறிசெல்லும் போது sunshades -ல் பிம்பம் வானவில் போல் காட்சியளித்திருக்கலாம். Hazcams -ன் பின் பகுதியில் சூரியஒளியின் காரணமாக, ரோவர் விண்கலம் பதிவு செய்த புகைபடத்தில் அவ்வாறு வண்ணம் ஏற்பட்டு இருக்கக்கூடும் என்று நாசா விளக்கம் அளித்தது.