மகளிர் தின வாழ்த்துக்கள்

மகளிர் தின வாழ்த்துக்கள்
பெண்களை போற்றும் விதமான மகளிர்தினத்தை நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றோம். இந்த கொண்டாட்டத்தின் மத்தியில் சில கேள்விகளை முன்வைக்கப்படுகிறது. இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்திருந்தால் மிக்க மகிழ்ச்சி தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ள முற்படுகின்றேன்.
எப்பொழுது மகளிர் தினம் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?

18-ம் நூற்றாண்டில் பெண்கள் வீட்டு வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனா். 1850-களில் பிற்பகுதியில் தான் பெண்கள் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், சுரங்கள் என பணியில் அமர்த்தப்பட்டனர். ஆண்களுக்கு நிகராக அவர்கள் வேலை பார்த்தாலும் ஊதிய உயர்வு, உரிமைகள் என பாகுபாடு காட்டப்பட்டது. இந்த 1850களில் பிற்பகுதியில் தான் பொதுவுடைமையின் தந்தை காரல் மார்ஸ்க் என்பவர் Internation working wowen association -னை உருவாக்கினார். இது தான் பின்நாளில் முதல் அகிலம் என்று குறிப்பிட்டார்கள். இரண்டாவது அகிலம் Socialist அகிலம் என்றும் இந்த Socialist அகிலம் உருவான போது தான் Socials பெண்கள் இயக்கம் உருவானது. Socials பெண்கள் இயக்கம் 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகன்-ல் ஆகஸ்ட் 26 மற்றும் 27 தேதிகளில் உலக Socialist பெண்கள் மாநாடு ஒன்றை நடத்தினர். இதில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த மார்க்சிஸ்ட் வாதியான தோழர் க்ளாரா ஜெட்கின் தலைமை தாங்கி நடத்தினார். இதில் 17 நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு பெண்கள் மட்டுமே இதை நடத்தினர். இதில் பல விவாதங்களும், தீர்மானங்களும் நடத்தினர். வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் தினம் உருவாக காரணமான தீர்மானம் இந்த மாநாட்டில் தான் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் நேரடி பதிவு என்வென்றால் அனைத்து தேசிய இனங்களை சேர்ந்த Socialist பெண்கள் தனிச்சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தை கடைப்பிடிக்க வேண்டும். சமூக பிரச்சினைகள் பற்றிய Socialist பெண்கள் பிரச்சினை முழுவதையும் வாக்குரிமை கோரிக்கைகளை வைத்து விவாதிக்க முடிவு எடுத்தனர்.

ஏன் மகளிர் தினம் மார்ச்-8ம் அன்று கொண்டாடப்படுகிறது?
1910-ம் ஆண்டு டென்மார்க் Socialist மாநாட்டில் ஏற்றப்பட்ட மகளிர் தின தீர்மானத்தை கடைப்பிடித்து 1911-ம் ஆண்டு ஆஸ்திரேலியா, டென்மார்க், சுவிட்ஸ்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் மகளிர் தினம் மிகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அதற்கு அடுத்து வந்த வருடங்களிலும் பெண்களால் மகளிர் தினம் மகிழ்ச்சியுடன் கெண்டாடப்பட்டது. 1914-ம் ஆண்டு வந்தது முதல் உலகப்போரும் வந்தது. அப்போது ரஷ்யாவும், ஜெர்மனியும் கடுமையாக மோதிக் கொண்டன. ரஷ்யா தோல்வியை தழுவியது. பல லட்சகனக்கான ரஷ்ய வீரர்கள் போரில் மாண்டனர். இதனால் கிடர்த்து எழுந்த ரஷ்ய பெண் தொழிலாளிகள் தங்களுக்கு தேவை போர் அல்ல அமைதியும், உணவும் மட்டுமே என்ற கோரிக்கையை வலியுறுத்தி மன்னராட்சியை எதிர்த்து ரஷ்ய தலைநகரில் வேலைநிறுத்தம் செய்து போராட்டத்தில் இறங்கினர். போருக்கு எதிராக ரஷ்ய பெண்கள் கிடர்த்து எழுந்த நாள் மார்ச்-8 ம் தேதி. பெண்கள் ஏற்படுத்திய புரட்சியில் நீர்ச்சியாகத்தான் ரஷ்ய புரட்சி ஏற்பட்டு ஜார் மன்னாின் ஆட்சி கவிழ்ந்தது ரஷ்ய பெண்கள் மார்ச்-8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாடினர் . 1921-ம் ஆண்டில் நடைப்பெற்ற Socialist மாநாட்டில் ரஷ்ய பெண்கள் மார்ச்-8ல் கொண்டாடி வருவது போலவே மற்ற நாட்டு பெண்களும் மார்ச்-8லேயே மகளிர் தினத்தை கொண்டாட முடிவெடுத்தனர்.
ஐநா எப்போது மகளிர் தினத்தை அறிவித்தது?
1975-ம் ஆண்டு மகளிர் ஆண்டாக அழைத்து மாா்ச்-8 ம் தேதி மகளிர் தினமாக அறிவித்து.
இந்த வருடத்தின் மகளிர் தினத்திற்கான கருப்பொருள்(Theme) என்ன?
ஒவ்வொரு வருடமும் ஐ நா அமைப்பு ஒரு Theme உருவாக்குவார்கள். கடந்த வருடத்தின் Theme EachForEqual இந்த வருடத்தின் Theme Choose to Challenge
மகளிர் தின கொண்டாட்டத்திற்கான நிறம் என்ன?
மகளிர் தின கொண்டாட்டத்திற்கான நிறங்கள் என்று குறிப்பிட்டோம் என்றால் முதன்மையாக வருவது ஊதா நிறம் சுயமரியாதையும், கௌரவத்தையும் குறிப்பது. எனவே இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பெண்களாகிய நாம் சுயமரியாதையோடும், கௌரவத்தோடும், நற்சிந்தனையோடும், நற்செயல்களோடும் நம் வீட்டையும் நாட்டையும் பாதுகாப்போம்.
Author name : Anitha Mohan